இதுதான் அஜீத்தின் இரண்டாவது கெட்டப்

Geetha priya| Last Modified சனி, 16 ஆகஸ்ட் 2014 (11:37 IST)
கௌதம் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தில் அவருக்கு இரு கெட்டப்கள் உள்ளன. அதில் இரண்டாவது கெட்டப்தான் இங்கே நீங்கள் பார்ப்பது.
கௌதம் படம் சில மாதங்கள் முன் தொடங்கியது. அஜீத், அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் எடுக்கப்பட்டன. அதில் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலுடன் மீசையில்லாமல் அஜீத் நடித்தார்.
 
படத்தின் பிளாஷ்பேக்கில் த்ரிஷாவுடனான காட்சிகள் வருகின்றன. அதில் அடர்த்தியான மீசையுடன் கறுப்பு நிற ஹேர் ஸ்டைலுடன் அஜீத் தோன்றுகிறார். இந்த கெட்டப்பில் அவரும் த்ரிஷாவும் காதல் செய்யும் ரயில் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன.
 
படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதில் மேலும் படிக்கவும் :