வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 8 ஜூன் 2015 (12:19 IST)

நடிகை ஆர்த்தி அகர்வால் திடீர் மரணம்

நேற்று முன்தினம் திடீரென்று நடிகர் ஆர்த்தி அகர்வால் மரணமடைந்தார். 
 
தமிழில் ஸ்ரீகாந்த் நடித்த பம்பரகண்ணாலே படத்தில் நாயகியாக நடித்தவர் ஆர்த்தி அகர்வால். தெலுங்கில் அனைவரும் அறிந்த முன்னணி நடிகை.
கடந்த 2007 -இல் உஜ்வால் குமார் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து யுஎஸ்ஸில் செட்டிலானார். அதன் பிறகு திரைப்படங்களில் அவர் நடிக்கவில்லை. இந்நிலையில் அவர் மரணமடைந்ததாக நேற்று முன்தினம் தகவல் வெளியாகி ஆந்திர திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியது. 
 
சமீபமாக உடல்நலக்குறைவால் ஆர்த்தி அகர்வால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரது மரணத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.