தொடர்புடைய செய்திகள்
- ஜனநாயகன் படத்திற்கு சென்சார் எப்பதான் கிடைக்கும்!?. எப்பதான் ரிலீஸ்?....
- சொகுசு கார் பரிசு: தாய்கிழவி இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்
- விரைவில் பார்ட் 3!.. காந்தாரா ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்!.. ரிஷப் ஷெட்டி கொடுத்த அப்டேட்!...
- கட்டா குஸ்தி 2 : 5ம் நாள் வசூல் நிலவரம்
- ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' பட ஆடியோ விழா: முதல்வர் விஜய் பங்கேற்பாரா?
சுப்ரமணியபுரம் துளசிக்கு திருமணம்: மன்த் ஆஃப் மது இயக்குநரை கரம் பிடித்தார் சுவாதி!
தமிழ் சினிமாவில் கண்கள் இரண்டால்... என்ற ஒரே ஒரு பாடல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயங்களையும் கொள்ளையடித்தவர் நடிகை சுவாதி ரெட்டி. 'சுப்ரமணியபுரம்' படத்தில் 'துளசி' என்ற கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் ரசிகர்களின் ஃபேவரிட் நாயகியாக மாறினார்.
தற்போது அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு புதிய மற்றும் மகிழ்ச்சியான தொடக்கம் ஏற்பட்டுள்ளது. பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ஸ்ரீகாந்த் நாகோத்தியை சுவாதி எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
தெலுங்கு தொலைக்காட்சியில் கலர்ஸ் என்ற சூப்பர் ஹிட் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமாகி, கலர்ஸ் சுவாதி என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து 2005-ஆம் ஆண்டு 'டேன்ஜர்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா உலகிற்குள் நுழைந்தார். தமிழில் இவர் காலடி எடுத்து வைத்த முதல் படமான 'சுப்ரமணியபுரம்' (2008) இண்டஸ்ட்ரி ஹிட்டடித்தது. தொடர்ந்து, விஜய் சேதுபதியுடன் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', ஜெய்க்கு ஜோடியாக 'வடகறி' மற்றும் கிருஷ்ணாவுடன் 'யாக்கை' போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நல்ல கதைகளுக்காகக் காத்திருந்ததாலும், பிற மொழிப் படங்களில் கவனம் செலுத்தியதாலும் அவர் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் நாகோத்தி இயக்கத்தில் வெளியான மன்த் ஆஃப் மது என்ற தெலுங்கு திரைப்படத்தில் சுவாதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்களின் முதிர்ச்சியான திரைக்கதை மற்றும் சுவாதியின் எதார்த்த நடிப்பு பெரும் பாராட்டுகளைப் பெற்றது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட நட்பும், புரிதலும் தான் தற்போது இவர்களை வாழ்க்கைத் துணைகளாக மாற்றியுள்ளது. தங்களது காதலைப் பொதுவெளியில் காட்டாமல் ரகசியமாக வைத்திருந்த இந்த ஜோடி, தற்போது திடீரென தங்களது திருமணப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
ஆடம்பரமான திருமணங்களைத் தவிர்த்து, மிகவும் எளிய முறையில், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. சுவாதி தனது சமூக வலைத்தள பக்கத்தில், "Hitched 08-07-2026" எனக் குறிப்பிட்டு திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
இதைக் கண்ட திரைத்துறையினரும், ரசிகர்களும் ஆச்சரியமடைந்து, புதுமணத் தம்பதிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் குவித்து வருகின்றனர்.
