வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (19:36 IST)

இந்தியில் சூர்யாவின் டைம் மெஷின்...?

சூர்யா பல வேடங்களில் நடித்துள்ள 24 படத்தை முதலில் ஸ்டுடியோ கிரீன்தான் தொடங்கியது. 


 

 
பிறகு சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பாக படத்தை தயாரித்தார். அதனை வாங்கிய ஸ்டுடியோ கிரீன் படத்தின் ஒட்டு மொத்த உரிமையை ஈராஸுக்கு விற்றது. ஆக, படம் வெளியாகும் முன்பே மூன்று கைகள் மாறியிருக்கிறது.
 
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, சூர்யாவும், ஸ்டுடியோ கிரீனும் படம் வெளியாகும் முன்பே பல கோடிகள் லாபம் பார்த்திருக்கிறnர்கள். படம் திரையரங்குகளுக்கு வருகையில் ஈராஸின் லாபமும் சேர்ந்து படத்தின் விலை தாறுமாறnக எகிறும்.
 
நிற்க. முக்கியமான விஷயம், படம் தமிழில், தெலுங்கில் வெற்றி பெற்றால், டைம் மெஷினை மையப்படுத்திய இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய சூர்யா முடிவெடுத்துள்ளாராம். அப்படி ரீமேக்கானால், அதில் பல கோடிகள் லாபம் பார்க்க முடியும்.