வெள்ளி, 13 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 29 நவம்பர் 2025 (09:27 IST)

ஜனவரி 23 ஆம் தேதி ‘கருப்பு’ ரிலீஸ்… இறுதி முடிவை எடுத்த படக்குழு!

ஜனவரி 23  ஆம் தேதி ‘கருப்பு’ ரிலீஸ்… இறுதி முடிவை எடுத்த படக்குழு!
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் கருப்பு படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா மற்றும் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தின் முதல் தனிப்பாடலான ‘God mode’ பாடல் வெளியாகி கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான காந்தாரா-1 படம் பெற்ற அளப்பரிய வெற்றியை அடுத்து கருப்பு படத்தில் க்ளைமேக்ஸ் காட்சி மாற்றப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் க்ளைமேக்ஸ் காட்சிக்கு ஏற்றவாறு தற்போது மேலும் சிலக் காட்சிகளையும் மாற்றி வருகின்றனர்.

இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் வியாபாரம் முடியாததால் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படாமலேயே இருந்தது. ஆனால் இப்போது படத்தை  நெட்பிளிக்ஸ் நிறுவனமும், ஜி தமிழ் தொலைக்காட்சி நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. அதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 23 ஆம் தேதி என முடிவு செய்து அதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.