செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 1 அக்டோபர் 2025 (06:03 IST)

புதிதாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கும் சூர்யா… பா ரஞ்சித்துடன் கூட்டணி!

புதிதாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கும் சூர்யா… பா ரஞ்சித்துடன் கூட்டணி!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ‘ரெட்ரோ’ படத்துக்குப் பிறகு  சூர்யா சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ‘வேட்டைக் கருப்பு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து லக்கி பாஸ்கர் புகழ் இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் ‘சூர்யா 46’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்துக்குப் பிறகு சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் சூர்யா அடுத்து ரோமாஞ்சம் மற்றும் ஆவேஷம் ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் நஸ்ரியா கதாநாயகியாக நடிக்க, சுஷின் ஷியாம் இசையமைப்பாளராகவும் பணியாற்ற உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை ‘ழகரம்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலமாக சூர்யா தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் பா ரஞ்சித் இயக்கத்தில் அடுத்ததொரு படத்தை இந்நிறுவனத்துக்காகத் தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் சொல்லப்படுகிறது. நீண்ட காலமாக இயங்கி வந்த சூர்யாவின் ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சமீபத்தில் மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.