சூர்யாவின் இடத்தை நிரப்பும் விஷால்!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 15 டிசம்பர் 2016 (18:49 IST)
‘எஸ்-3’ படம் வருகிற கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி டிசம்பர் 23-ந் தேதி வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். 

 
 
இந்நிலையில், படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளதால் அதற்கு ‘யு’ சான்றிதழ் வாங்குவதற்காக போராடி வருகின்றனர். 
 
இதை தவிர்த்து படத்தின் காட்சிகளுக்கு அதிக விலையில் டிக்கெட் விற்பனை செய்யக்கூடாது என்று படத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
 
இக்காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், சூர்யா விட்டுச் சென்ற அந்த இடத்தை நிரப்ப விஷால் முன்வந்துள்ளார். விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘கத்திச்சண்டை’ படத்தை டிசம்பர் 23-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். 
 
இப்படம் ஏற்கெனவே பொங்கல் தினத்தையொட்டி ஜனவரியில் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால், அதற்கு முன்னதாகவே டிசம்பர் 23-ந் தேதி வெளியாகவிருக்கிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :