1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. suriya showed the anger to his fans

நிர்வாகிகளுக்கு டோஸ் விட்ட சூர்யா!.. உடனே வெளியான அறிக்கை!...

suriya
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் சூர்யா. பெரும்பாலும் சொந்த தயாரிப்பில் அல்லது உறவினர்களின் தயாரிப்பில் படங்களில் நடிப்பவர் இவர். சினிமாவில் நடிப்பதில் குறிப்பிட்ட சதவீதம் ஏழை, எளிய மாணவர்கள் மேல் படிப்பை தொடர உதவி செய்கிறார். இதற்காகவே அகரம் அறக்கட்டளையை அவர் நடத்தி வருகிறார்.

இந்த அறக்கட்டளை மூலம் பலரும் மருத்துவர்களாகவும், ஐஏஎஸ் அதிகாரிகளும் மாறியிருக்கிறார்கள். ஒருபக்கம் சமீபத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்து 340 கோடி வரை வசூல் செய்து விட்டது. தற்போது அவர் மலையாள பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்..

இந்நிலையில்தான் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் ‘காலம் முடிவெடுத்தால் தலைவர் அரசியலுக்கு வருவார்’ என சொல்லிவிட்டார்/ இதை முக்கிய ஊடகங்கள் கூட செய்தியாக வெளியிட்டன.

விஜய் தற்போது அரசியலுக்கு வந்த முதல்வராகிவிட்ட நிலையில் எல்லோருக்கும் அந்த ஆசை வந்திருக்கிறதா என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது சூர்யாவுக்கு தெரியாமலே அந்த நிர்வாகி பேசியிருப்பது தெரிய வந்திருக்கிறது. அந்த நிர்வாகியை போனில் அழைத்து சூர்யா டோஸ் விட்டாராம்.. இதையடுத்தே சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணமெல்லாம் இல்லை என சூர்யா தலைமை ரசிகர் மன்றம் சார்பில் அறிக்கை வெளியானதாக சொல்கிறார்கள்.
அடுத்த கட்டுரையில்
முருகன் வட மாநில கடவுளா?!.. ஜூனியர் என்.டி.ஆர் புது படம் ஏற்படுத்திய சர்ச்சை...