வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Updated : வெள்ளி, 30 மே 2014 (14:20 IST)

ஸ்ருதிஹாசன், ரெய்னா காதல் - புதிய செய்தியால் பரபரப்பு

ஸ்ருதிஹாசன் நடிக்க வந்ததிலிருந்து இன்றுவரை சர்ச்சைகளின் நாயகியாகவே வலம் வருகிறார். தற்போதுகூட தெலுங்குப் படத்தின் பாடல் காட்சியில் எடுக்கப்பட்ட கிளாமர் ஸ்டில்களை வெளியிட்டதற்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது ஆந்திரா போலீஸில் புகார் தந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரைப் பற்றி உலவும் இன்னொரு வதந்தி, கிரிக்கெட் வீரர் ரெய்னாவும், ஸ்ருதியும் ரகசியமாக காதலிக்கிறார்கள்.
காதல் சர்ச்சை ஸ்ருதிக்கு புதிதல்ல. ஏற்கனவே நடிகர் சித்தார்த்துடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். ஹைதராபாத்தில் இருவரும் லிவிங் டுகெதராக ஒரே வீட்டில் வசிப்பதாகக்கூட செய்தி வெளியானது. ஒருகட்டத்தில் இந்த ஜோ‌டிக்குள் மனக்கசப்பு உருவாகி இருவரும் பிரிந்தனர். சித்தார்த் சமந்தாவை காதலிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு காதல் சர்ச்சைக்குப் பதில் கிளாமர் சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கினார் ஸ்ருதி.

டி டே படத்தில் கராச்சி நகரத்து பாலியல் தொழிலாளியாக படுகவர்ச்சியாக நடித்தார் ஸ்ருதி. அப்படத்தின் போஸ்டர்களும், ரேஸ்குர்ரம் படத்தில் அல்லு அர்ஜுன் மடியில் ஸ்ருதி அமர்ந்திருந்த ஸ்டில்களும் கடும் கண்டனத்துக்குள்ளாயின. யவடு படத்தின் பாடல் காட்சியில் எடுக்கப்பட்ட கிளாமர் ஸ்டில்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட புகைப்படங்களை வெளியிட மாட்டோம் என்று கூறிவிட்டு சொன்ன பேச்சை மீறிவிட்டனர் என போலீஸில் ஸ்ருதி புகார் தந்தார். இது தெலுங்கு தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. 
இந்நிலையில்தான் இப்படியொரு செய்தி. ஸ்ருதியும், ரெய்னாவும் காதலிக்கிறார்கள். 
 
இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலிப்பதாகவும், இருவருமே தங்களின் காதலை ரகசியமாக பேணி வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. ஸ்ருதி இதற்கு ஆம் என்று பதிலளிக்கப் போகிறாரா இல்லை செய்தி வெளியிட்டவர்கள் மீது புகார் தரப் போகிறாரா அதுவுமில்லை ரெய்னா என்னுடைய நெருங்கிய நண்பர் என்று சொல்லப் போகிறாரா?
 
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.