கிளாமருக்கு மாறிய இவன் வேற மாதிரி சுரபி

வீரமணி பன்னீர்செல்வம்| Last Modified செவ்வாய், 8 ஜூலை 2014 (21:48 IST)
இவன் வேற மாதிரி படத்தில் அறிமுகமான சுரபி தனுஷின் வேலையில்லா பட்டதாரியில் நடித்துள்ளார். ஹீரோயின் அமலா பால். சுரபிக்கு முக்கியமான வேடம். சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு ஜோ‌டியாக நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தற்போது அந்தப் படத்தில் சுரபி இல்லை.
 
ஏன்?
 
சுசீந்திரன் கேட்ட தேதிகளில் சுரபிக்கு தேர்வு இருந்ததால் நடிக்க முடியவில்லையாம். அதற்காக வருத்தம் இருந்தாலும் தெலுங்கில் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.
தெலுங்கில் கண்மணி இயக்கத்தில் சுதீப் கிஷன் நடிக்கும் படத்தில் சுரபி ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தின் சிறப்பு அம்சமே ஹீரோயின் காட்டப் போகும் கிளாமர்தானாம். இதுபற்றி கூறிய சுரபி, இவன் வேற மாதிரி படத்தைப் போலன்றி இந்தத் தெலுங்குப் படத்தில் கிளாமராக நடிக்கிறேன். என்னுடைய கதாபாத்திரம் அப்படி என கூறியுள்ளார்.
 
சுரபியின் இந்த தெலுங்குப் படம் வெளிவந்தால் தமிழிலும் வாய்ப்புகள் குவிய வாய்ப்புள்ளது. எல்லாம் சுரபி காட்டப் போகும் கிளாமரில் இருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :