ரஜினியின் ’கபாலி’ பர்ஸ்ட் லுக்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வியாழன், 17 செப்டம்பர் 2015 (13:04 IST)
ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. நரைத்த தலைமுடி, அட்டகாசமான கோட் என்று ரஜினியின் பர்ஸ்ட் லுக் செம அசத்தல்.
 
 
கபாலியில் ரஜினி தாதாவாக நடிக்கிறார் என செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. அதனை மெயப்பிப்பது போல் இந்த பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. கோட் அணிந்த ரஜினி மலேசியாவின் பிரமாண்ட கட்டிடங்களுக்குப் பின்னணியில் அமர்ந்திருப்பது போன்று ஒரு போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 

 
தாதா கபாலி அடிமையாக இருக்கும் தமிழர்களை காப்பாற்றுவதுதான் கபாலி படத்தின் கதை என்று ஒரு செய்தி உள்ளது. அதனை பிரதிபலிப்பது போல், இன்னொரு போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
ரசிகர்களின் நீண்டநாள் காத்திருப்புக்கு இந்த இரண்டு போஸ்டர்களும் நியாயம் செய்துள்ளன என்றுதான் கூற வேண்டும். இன்று முதல் கபாலியின் படப்பிடிப்பு தொடங்குவது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :