போடுங்க.. சீக்கிரம் போடுங்க.. விஷால், சுந்தர் சியை அவசரப்படுத்திய இசையமைப்பாளர்.. வைரல் வீடியோ..!
தமிழ் திரையுலகில் கமர்ஷியல் ஹிட் படங்களை வழங்குவதில் கைதேர்ந்த இயக்குநரான சுந்தர்.சி மற்றும் ஆக்ஷன் கிங் விஷால் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்துள்ளனர். இவர்களது கூட்டணியில் உருவான மத கஜ ராஜா திரைப்படம் நீண்ட தாமதத்திற்குப் பிறகு கடந்த ஆண்டு வெளியாகி, சுமார் 50 கோடி ரூபாய் வரை வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த தொடர் வெற்றியை தக்கவைக்கும் வகையில், தற்போது புதிய ப்ராஜெக்ட் ஒன்றில் இருவரும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
இயக்குநர் சுந்தர்.சி முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ஒரு படத்தை இயக்கவிருந்தார். ஆனால், சில காரணங்களால் அந்த வாய்ப்பு தள்ளிப்போனதை அடுத்து, மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பணிகளை வெற்றிகரமாக முடித்தார்.
தற்போது விஷால் நடிக்கும் புதிய படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்கு சுந்தர்.சியின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஷால் - சுந்தர்.சி - ஹிப் ஹாப் ஆதி என வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://x.com/AvniCinemax_/status/2013233379505025202
Edited by Siva