புதன், 18 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 18 ஜனவரி 2026 (20:09 IST)

ஜனநாயகனோடு போட்டி போடல!.. சொன்னா நம்புங்கப்பா!.. சுதாகொங்கரா ஓப்பன்!...

sudha kongara
விஜய் ரசிகர்கள் விஜயின் படம் வெளியாகும் போது வேறு ஒரு நடிகரின் படம் வெளியானால் அதற்கு எதிராக களமிறங்கி வேலை செய்வார்கள் அந்த நடிகரை மிகவும் அருவருப்பாக திட்டி மோசமாக விமர்சிப்பார்கள் அஜித், ரஜினியை கூட இதுபோன்று பலமுறை அவர்கள் ட்ரோல் செய்திருக்கிறார்கள்.

ஜனவரி 9ம் தேதி ஜனநாயகனும், ஜனவரி 10ம் தேதி பராசக்தியும் வெளியாகிறது என அறிவிப்பு வெளியானதும் விஜய் ரசிகர்களின் கோபம் சிவகார்த்திகேயன் பக்கமும், பராசக்தி படம் பக்கமும் திரும்பியது. ஒருபக்கம் ஜனநாயகன் படம் சென்சாரில் சிக்கி ரிலீஸாகாமல் போனதால் விஜய் ரசிகர்கள் மொத்த கோபத்தையும் பராசக்தி படத்தின் மீது காட்டினார்கள். பராசக்தி முதல் காட்சி வெளியாவதற்கு முன்பே படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பினார்கள்.

ஒருபக்கம் பராசக்தி படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களும் வந்ததால் படத்திற்கு பெரிய வசூல் இல்லை. இது தொடர்பாக ஊடகம் ஒன்றில் பேசியதாக பராசக்தி பட இயக்குனர் சுதா கொங்கரா விஜய் ரசிகர்களின் பெயரை சொல்லாமல் சிலர் ரவுடிகள் போலவும், குண்டாஸ் போலவும் நடந்து கொள்கிறார்கள் என்று சொல்லியிருந்தார். இதுவும் விஜய் ரசிகர்களை கோபப்படுத்தியது.

இந்நிலையில், ஒரு விழாவில் பேசிய சுதா கொங்கரா ‘நான் எனது விளக்கத்தை பராசக்தி இசை வெளியீட்டு விழாவிலேயே சொல்லி விட்டேன்.. நானே விஜயின் ரசிகை. அவரின் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன் என்று சொல்லிவிட்டேன். ஜனநாயகன் படத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன் சென்சார் இப்படி செய்தது தவறு. எந்த படத்திற்கும் அப்படி நடக்கக் கூடாது.. நாங்கள் அந்த படத்துடன் போட்டி போட நினைக்கவே இல்லை.. மிகப் பெரிய நட்சத்திரத்துடன் நீங்கள் எப்படி ஓட்டு போடுவீர்கள்?.. எங்களுக்கும் பண்டிகை விடுமுறை வெளியீடு தேவைப்பட்டது.. அவ்வளவுதான்’ என சொல்லியிருக்கிறார்.