கவினின் ‘மாஸ்க்’ படத்தில் நடந்த ரகளை… பெண் நடிகையை அடித்தாரா ஸ்டண்ட் மாஸ்டர்?
சிவகார்த்திகேயன் பாணியில் சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்து ஆரம்பநிலை வெற்றியை பெற்றுள்ளார் கவின். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் கவனிக்கப்படும் ஒரு நடிகராகியுள்ளார். இப்போது அவர் நான்குக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கிறார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இப்போது கவின் தன்னுடைய அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்துக்கு மாஸ்க் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்க இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியதில் இருந்தே பல கிசுகிசுக்கள் பரவின. ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனருக்கும் கவினுக்கும் மோதல் ஏற்பட்டதாக தகவல் பரவியது. அதுபோல இப்போது ஒரு அதிர்ச்சிகரமானத் தகவலை வலைப்பேச்சு அந்தணன் பகிர்ந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் காட்டுப்பாக்கத்தில் நடந்தபோது ஸ்டண்ட் மாஸ்டர் பெண் துணை நடிகர் ஒருவரை அடித்துவிட்டாராம். இதனால் பிரச்சனை ஏற்பட வெற்றிமாறன் தலையிட்டுப் பிரச்சனையைத் தீர்த்து வைத்ததாக சொல்லப்படுகிறது.