வெள்ளி, 13 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 10 பிப்ரவரி 2026 (10:29 IST)

இது ஒன்றும் தியேட்டர் கிடையாது.. கார் பந்தய மைதானத்தில் ரசிகர்களை கண்டித்த அஜித்..!

ajith

அபுதாபியில் நடைபெற்ற யாஸ் ஸ்பீடு பெஸ்டிவல் கார் பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித் குமார், அங்கு கூடியிருந்த ரசிகர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளும்படி அன்புடன் வேண்டுகோள் விடுத்தார். 

 
பிப்ரவரி 7-8 தேதிகளில் நடைபெற்ற இந்த போட்டியில், அஜித் தனது சொந்த அணியின் டிரைவர் மற்றும் டீம் பிரின்சிபல் என இரு நிலைகளில் களமிறங்கினார். அஜித்தை கண்டதும் உற்சாகமடைந்த ரசிகர்கள் கோஷமிட்டு ஆரவாரம் செய்தபோது, தான் போட்டியில் முழுமையாக கவனம் செலுத்த அமைதி காக்குமாறு அவர் கோரினார்.
 
முன்னதாக கோவில்கள் மற்றும் பொது இடங்களிலும் அமைதி காக்க சொல்லும் அஜித், ரேஸ் டிராக்கிலும் அதே ஒழுக்கத்தை வலியுறுத்தியுள்ளார். அவர் தனது ரசிகர்களிடம் ‘தயவுசெய்து கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள், இது ஒன்றும் தியேட்டர் கிடையாது என்று அன்புடன் கண்டித்தார்.
 
அஜித்தின் இந்த அன்பான கண்டிப்பு சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுக்களையும், சுவாரஸ்யமான மீம்ஸ்களையும் பெற்று வைரலாகி வருகிறது.
 
Edited by Siva