1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 24 ஜூன் 2025 (13:54 IST)

நான் தவறு செய்துவிட்டேன்.. நானேக் கேட்கும் அளவுக்கு அடிமையாகிவிட்டேன் –ஸ்ரீகாந்த் வாக்குமூலம்!

நான் தவறு செய்துவிட்டேன்.. நானேக் கேட்கும் அளவுக்கு அடிமையாகிவிட்டேன் –ஸ்ரீகாந்த் வாக்குமூலம்!
தமிழ் சினிமாவில் ரோஜாக் கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரீகாந்த் தொடர்ந்து சில ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தார்.ஆனால் சமீபகாலமாக அவரின் எந்த படமும் ஹிட்டாகவில்லை. அதனால் மார்க்கெட் இல்லாத நடிகர்கள் பட்டியலில் அவர் இணைந்தார்.

சமீபத்தில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவர் தன்னிடம் ஸ்ரீகாந்த் கொக்கைன் வாங்கிப் பயன்படுத்தியதாகவும், அதை தானே நேரில் பார்த்ததாகவும் வாக்குமூலம் கொடுக்க, ஸ்ரீகாந்த்துக்கு நேற்று போதைப் பொருள் சோதனை செய்யப்பட்டது. அதில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உண்மை எனத் தெரியவர அவர் கைது செய்யப்பட்டார். சிறையில் அவருக்கு முதல்  வகுப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ஜாமீன் கேட்டு அவர் மனுதாக்கல் செய்த நிலையில் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. ஸ்ரீகாந்த் தான் போதைப் பொருள் பயன்படுத்தி தவறிழைத்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் “நான் நடித்த ஒரு படத்துக்கு எனக்கு 10 லட்சம் சம்பளப் பாக்கி இருந்தது. அதற்காக எனக்கு கொக்கைன் கொடுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் நானேக் கேட்டு வாங்கும் அளவுக்கு அடிமையாகிவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.