1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. spider man brand new day box office

ஒரே வாரத்தில் ரூ.11 750 கோடி வசூல்... பாக்ஸ் ஆபிஸை கலக்கும் ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே

ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே
ஹாலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த  ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே  திரைப்படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்து கொண்ட டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டயா மீண்டும் இணைந்து நடித்துள்ள இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
 
கிறிஸ் மெக்கென்னா மற்றும் எரிக் சோமர்ஸ் இணைந்து திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தை, டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கியுள்ளார். கடந்த ஜூலை 30-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ஆங்கிலத்துடன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி இந்திய ரசிகர்களை சென்றடைந்தது.
 
மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்ற விமர்சனங்கள் இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் படம் அசத்தலான வசூலை குவித்து வருகிறது. வெளியான முதல் 7 நாட்களில் இந்தியாவில் ரூ.380.78 கோடி வசூலித்துள்ள இந்த படம், உலகம் முழுவதும் ரூ.11,750 கோடி வசூலை எட்டி புதிய சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
வார இறுதி நாட்களில் மேலும் அதிக திரையரங்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், படத்தின் மொத்த வசூல் இன்னும் கணிசமாக உயரும் என திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
14 நாட்களில் ஜனநாயகன் செய்த வசூல்