வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 28 மே 2015 (16:33 IST)

அரண்மனையில் புதிதாக இணைந்த ஆடுகளமும் பரோட்டாவும்

இனிமே ஹீரோதான். நட்புக்காக மட்டும் காமெடி ரோல் என்று முடிவு செய்து சந்தானம் அறிவித்தார். அவரது நட்பு வட்டாரத்தில் சுந்தர் சி. இல்லையா அல்லது சுந்தர் சி.யே அவரை நட்பு வட்டத்திலிருந்து டெலிட் செய்தாரா?
சுந்தர் சி.யின் கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை படங்களில் நடித்த சந்தானம் அரண்மனை 2 -இல் இல்லை. அவருக்குப் பதில் பரோட்டா சூரியை அரண்மனை இரண்டாம் பாகத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார்.
 
படத்தில் வில்லனாக நடிக்க அவர் தேர்வு செய்திருப்பது ஆடுகளம் நரேன். இந்த பேய் படத்தில் த்ரிஷா, ஹன்சிகா ஆகியோருடன் சித்தார்த்தும் நடிக்கிறார். குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.