ரஜினி முருகனின் ஆடியோ உரிமையை வாங்கிய சோனி மியூஸிக்

Mahalakshmi| Last Modified வியாழன், 18 டிசம்பர் 2014 (13:19 IST)
பெரிய நடிகர்களின் படங்களின் ஆடியோ உரிமைகளை மட்டும் வாங்கிக் கொண்டிருந்த சோனி மியூஸிக் சிவ கார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தின் ஆடியோ உரிமையையும் வாங்கியுள்ளது.
சோனி சிவ கார்த்திகேயன் நடித்த படத்தின் பாடல்கள் உரிமையை வாங்குவது இது முதல்முறையல்ல. வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மான் கராத்தே படங்களின் ஆடியோ உரிமைகளையும் சோனிதான் வாங்கியது. இப்போது ரஜினி முருகன்.
 
சிவ கார்த்திகேயனும் பெரிய நடிகர்கள் லிஸ்டில் இடம்பிடித்திருப்பதையே இது காட்டுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :