1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Social Media or Sewer? Khushbu's Harsh Reply to Anonymous Trolls Sparks Debate

குஷ்பு தயாரித்த படத்தின் டிரைலரை வெளியிட்ட த்ரிஷா.. அநாகரீக கமெண்ட் பதிவு செய்த ஃபேக் ஐடி நெட்டிசன்கள்...!

த்ரிஷா எக்ஸ் பதிவு
சமூக வலைத்தளங்கள் என்பது கருத்து பரிமாற்றத்திற்கான தளம் என்பதை தாண்டி, பெண் பிரபலங்களை அநாகரிகமாகச் சாடும் ஒரு சாக்கடையாக மாறி வருகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. நடிகை த்ரிஷா ஒரு புதிய படத்தின் டிரைலரை வெளியிட்டு அதில் ஆம்பளையா பொம்பளையான்னு தெரியணும், அவ்வளவுதானே?" என்பதை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு ஒரு பயனர் "நீ ஆம்பளையா என்று சொல்" என வக்கிரமாக கமெண்ட் செய்ய, த்ரிஷாவிற்கு ஆதரவாக குஷ்பூ களமிறங்கினார்.
 
"உன்னை பெற்றவள் யார்?" என்று குஷ்பூ கேட்க, அந்த நபர் மேலும் கொச்சையாக பதிலளித்தார். இதனால் ஆத்திரமடைந்த குஷ்பூ நிதானமிழந்து, "ஒரு அப்பனுக்கு பிறந்தவனாக இருந்தால் முகத்தை காட்டு, ஏன் ஒரு ஐட்டத்திற்கு பிறந்தவன்னு நிரூபிக்கிறாய்" என அதே பாணியில் தரம் தாழ்ந்த வார்த்தைகளால் வசைபாடினார்.
 
குஷ்பூவின் இந்த அதிரடி பதிலடி பரபரப்பை கிளப்பினாலும், பொதுவாழ்வில் இருக்கும் ஒரு பெண்மணி போலி கணக்குகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் முகமற்ற நபர்களுடன் சரிசமமாக இறங்கி தன் மதிப்பை தேய்த்துக் கொள்ள வேண்டுமா என்ற விவாதமும் எழுந்துள்ளது. 
 
இத்தகைய வக்கிர நபர்களுக்கு பதிலடி கொடுப்பதை விட, இணையவழி குற்றப்பிரிவு மூலம் சட்டம் தன் கடமையை செய்ய வைப்பதே நிரந்தர தீர்வாகும். பிரபலங்கள் சட்ட வழிகளில் இவர்களை எதிர்கொள்வதே சமூகத்திற்குச் சரியான முன்மாதிரியாக அமையும்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
STR51 ஷூட்டிங் எப்போ?!.. செம அப்டேட் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி!..