விபத்து என்பது சும்மா, பர்ஸ்ட் லுக் 25 -ஆம் தேதி


Mahalakshmi| Last Modified வெள்ளி, 3 ஏப்ரல் 2015 (13:00 IST)
மரம் விரும்பாவிட்டாலும் காற்று விடுவதில்லை. மாவோவின் புரட்சிகரமான உதாரணத்துக்கு சிவ கார்த்திகேயன் அடிக்கடி ஆளாகிறார். 
 
 
ரஜினி முருகன் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் சிவ கார்த்திகேயன். அவர் விபத்தில் சிக்கியதாகவும், காயம் கடுமை எனவும் வதந்தி பரப்பப்பட்டது. அதனை வழக்கம் போல மறுத்தார் சிவ கார்த்திகேயன்.
 
என்னைப் பற்றி வதந்திகள் பரவி வருகிறது. நான் நலமாக இருக்கிறேன். தற்போது ரஜினி முருகன் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடந்து வருகிறது. ஏப்ரல் 25ம் தேதி ரஜினி முருகன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது. அதற்காக நான் காத்திருக்கின்றேன் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :