வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 14 அக்டோபர் 2016 (10:43 IST)

சிவகார்த்திகேயனை தெலுங்கில் அறிமுகம் செய்யும் தில் ராஜூ!!

சிவகார்த்திகேயனை தெலுங்கில் அறிமுகம் செய்யும் தில் ராஜூ!!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படம், தமிழ் மொழியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் நிலையில், அதனை தெலுங்கில் வெளியிடும் பணிகளை, பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ வேகப்படுத்தியுள்ளார்.


 
 
இப்படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள ரெமோ படம், ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று, வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை தில் ராஜூ வாங்கியுள்ளார். இந்நிலையில் வேகமாக டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த சில நாட்களில் தெலுங்கு ரெமோ வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் நடிகர் என்பதால், அவரை தெலுங்கு மொழியில் அறிமுகம் செய்யப் போவதாகவும் தில் ராஜூ கூறியுள்ளார்.