எனது அன்பிற்குரிய AK சார்! சிவகார்த்திகேயனின் ட்வீட்டுக்கு குவியும் லைக்ஸ்..!
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அஜித் குமார், தற்போது நடிப்பிலிருந்து சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு கார் பந்தயங்களில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அவரை பல திரைப்பிரபலங்கள் சந்தித்து வரும் நிலையில், சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், "தூய ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை இன்று நேரில் கண்டு அந்த உற்சாகத்தை உணர்ந்தேன். ஊக்கமளிக்கும் ஒரு மனிதருடன் செலவிட்ட ஒரு உன்னதமான நாள் இது. என்றும் உங்களைப் பார்த்து வியக்கிறேன், எனது அன்பிற்குரிய AK சார்!" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
அஜித்தின் ரேசிங் ஆர்வம் மற்றவர்களுக்கு பெரும் உத்வேகத்தை அளிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த இரு நட்சத்திரங்களின் சந்திப்பு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
Edited by Siva