"டாக்டர்" ஆனார் சிவகார்த்திகேயன்! வெளியான வீடியோ - குவியும் வாழ்த்துக்கள்!

papiksha| Last Updated: திங்கள், 2 டிசம்பர் 2019 (17:59 IST)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு மத்தியில் பெரிதாக பேசப்படும் நபராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.  கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த கமர்ஷியல் திரைப்படமான "நம்ம வீட்டு பிள்ளை" ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வெற்றிநடை போட்டது. 
 
அதையடுத்து நடிகர் சிவகார்திகேயன் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் "டாக்டர்" என்ற புது படத்தில் நடிக்கவிருக்கிறார். நெல்சன் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த "கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் என்பது நம் அனைவரும் அறிந்ததே. 
 
இந்நிலையில் தற்போது தனது இரண்டாவது படத்தை நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்க உள்ளார். இப்படத்தை KJR ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இதே நிறுவனம் தான் சிவாவின்  "ஹீரோ" படத்தையும் தயாரித்து வருகிறது. டாக்டர் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என டீஸருடன் படக்குழு சற்றுமுன் அதிகாரப்பூர்வாமாக அறிவித்துள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :