ஸ்கிரிப்ட் செலக்ஷனா இதான்.. குறி வச்சு தூக்கிய சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் இசையில் இந்த படம் வெளியானது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இது ஒரு பயோபிக் திரைப்படமாகும். வரலாற்றில் மிகச் சிறப்பு வாய்ந்த சம்பவமான இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவானது.
சமீப காலமாக சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுக்கும் கதைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதற்கு முன் அமரன் திரைப்படம் பெரிய அளவில் அவருக்கு ஒரு வெற்றியை பெற்று தந்தது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. சிவகார்த்திகேயன் அடுத்ததாக தாய்க்கிழவி திரைப்படத்தின் டைரக்டரான சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இது ஒரு கிராமத்து பின்னணியில் உருவாகும் திரைப்படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல குறுகிய காலத்தில் இந்த படத்தை முடிக்கும் திட்டத்திலும் இருக்கிறார்களாம். நேற்று தான் இந்த படத்திற்கான பூஜை நடைபெற்றது. அதோடு சிவகார்த்திகேயன் இந்த சினிமாவில் நுழைந்து 14 வருடங்கள் ஆகின்றன. இந்த படத்தின் ப்ரோமோ சூட் நாளை ஆரம்பமாக இருப்பதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.
மற்றபடி அதிகாரப்பூர்வ அறிவிப்பு சிவகார்த்திகேயன் பிறந்தநாளின் போது வெளியாகும் என தெரிகிறது. இந்த காம்போவை பொறுத்த வரைக்கும் தாய்க்கிழவி திரைப்படத்திற்கு முன்பே இந்த இயக்குநரை சிவகார்த்திகேயன் லாக் செய்துள்ளார். அது இந்த கதை மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் சிவகார்த்திகேயனை பழைய மாதிரி பார்க்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று தெரிகிறது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் போன்ற திரைப்படங்களில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் எப்படி இருந்ததோ அதே மாதிரியான ஒரு கதாபாத்திரமாக இது இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இயக்குனர் சிவக்குமார் முருகேசனை பொருத்தவரைக்கும் ஆண் பாவம் பொல்லாதது திரைப்படத்திற்கான கதாசிரியரும் இவர்தான். அதனால் சிவகார்த்திகேயன் எல்லா வகையிலும் யோசித்து தான் இந்த இயக்குனரை லாக் செய்துள்ளார் என்றே தெரிகிறது.