வியாழன், 6 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 7 செப்டம்பர் 2025 (11:18 IST)

KPY பாலா படத்தின் கட் அவுட்களைக் கிழிக்கிறார்களா சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

KPY பாலா படத்தின் கட் அவுட்களைக் கிழிக்கிறார்களா சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
விஜய் டிவில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலமானவர் பாலா. தற்போது திரைப்படங்களிலும் நடித்து வரும் பாலா, ஏழை எளிய மக்களுக்காக பல உதவிகளையும் செய்து வருகிறார்.குக்கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை, பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் என பாலா செய்து வரும் உதவிகள் தினம் தோறும் ட்ரெண்டாகி வருகின்றன.

இப்போது பாலா கதாநாயகனாக ‘காந்தி கண்ணாடி’ என்ற படத்தில் நடிக்க அந்த படம் நேற்று முன்தினம் ரிலீஸானது. இந்த படத்தில் பாலாஜி சக்திவேல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஷெரிஃப் என்பவர் இயக்க, விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர். இந்த படம் ரிலீஸாகி பெரும்பாலும் பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. தமிழக அளவில் முதல் நாளில் சுமார் 17 லட்சம் ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய படத்தின் இயக்குனர் ஷெரிஃப் “எங்கள் படத்தின் போஸ்டர்கள் மற்றும் கட் அவுட்களை எங்கேயும் வைக்க விடமாட்டேன் என்கிறார்கள். நானும் பாலாவும் சினிமா ஆசையில் ஓடிவந்தவர்கள்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.  சினிமா பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன் “சிவகார்த்திகேயன் ரசிகர்கள்தான் தியேட்டரில் பாலா படத்தின் கட் அவுட்களைக் கிழிக்கிறார்கள். அதை சிவகார்த்திகேயன் கண்டிக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.