வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 30 ஏப்ரல் 2015 (13:40 IST)

சென்னையில் நடந்த சிம்பு, த்ரிஷா போட்டோஷுட்

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மே முதல் வாரத்தில் தொடங்குகிறது. த்ரிஷா, தாப்ஸி, ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
தனுஷின் வுண்டர்பார் தயாரிக்கும் இந்தப் படத்தின் போட்டோஷுட் சென்னையில் நடந்தது. சிம்பு, த்ரிஷா கலந்து கொண்டனர்.
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு அர்விந்த் கிருஷ்ணா. இவர்கள் இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.