சிம்பு, ஸ்ருதியை கலாய்க்கிற எண்ணம் கடவுள் சத்தியமா குமாருக்கு இல்லையாம்


Sasikala| Last Modified வியாழன், 24 நவம்பர் 2016 (11:07 IST)
கதை இல்லாமல் கலாய்ப்பை மட்டும் நம்பி எடுத்தப் படம், கடவுள் இருக்கான் குமாரு. லட்சுமி ராமகிருஷ்ணன், ஸ்ருதி, சிம்பு, ஹாரிஸ் ஜெயராஜ் என்று சகட்டுமேனிக்கு அனைவரையும் படத்தில் கலாய்த்திருந்தனர்.

 
 
இதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் கடுமையாக எதிர்வனையாற்றினார். ஸ்ருதி, சிம்புவை விமர்சனம் செய்ததை அவர்களின் நலம் விரும்பிகள் கண்டித்து வருகின்றனர். இதற்கு கடவுள் இருக்கான் குமாரு படத்தின் இயக்குனர் ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
 
படத்தின் ஆரம்பத்தில், இதில் வரும் சம்பவங்கள், பெயர்கள் யாரையும் குறிப்பிடவில்லை என்று வரும். சிம்புவையோ, ஸ்ருதியையோ மனதளவில் காயப்படுத்த வேண்டும் என்று காட்சிகளை வைக்கவில்லை. இது வெறும் பகடிதான், அதனை பாஸிடிவ்வாக பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :