1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 21 ஜூலை 2015 (09:20 IST)

வாலு படத்தில் ஜெயலலிதா, நக்மா, சிம்ரன் கெட்டப்புகளில் ஹன்சிகா

வாலு படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் முடிந்த பிறகு கடைசியாக ஒரு பாடலை படமாக்கினர். இந்தப் பாடலில் எம்ஜிஆர், ரஜினி, அஜீத் கெட்டப்புகளில் சிம்பு ஆடியுள்ளார். உடன் ஆடிய ஹன்சிகா ஜெயலலிதா, நக்மா, சிம்ரன் ஆகியோரின் கெட்டப்புகளில் நடித்திருக்கிறார்.
வாலு படம் சென்ற வெள்ளிக்கிழமை வெளியாகியிருக்க வேண்டியது. ஆறு வழக்குகள் காரணமாக படம் தள்ளிப் போயுள்ளது. இந்தப் படத்தில் சரோஜாதேவி, குஷ்பு, சிம்ரன் என மூன்று தலைமுறை நடிகைகளுடன் சிம்பு நடனமாடுவதாக இருந்தது. கடைசியில் அவர்களை தவிர்த்து ஹன்சிகாவுடன் நடனம் ஆடினார்.
 
குறிப்பிட்ட அந்தப் பாடலில்தான் சிம்பு எம்ஜிஆராகவும், ஹன்சிகா ஜெயலலிதாவாகவும் நடித்துள்ளனர்.