செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 26 ஜூன் 2025 (13:41 IST)

மிடில் க்ளாஸ் அப்பாவின் கனவை நிறைவேற்றும் பையன்… 3BHK ட்ரைலர் எப்படி இருக்கு?

மிடில் க்ளாஸ் அப்பாவின் கனவை நிறைவேற்றும் பையன்… 3BHK ட்ரைலர் எப்படி இருக்கு?
8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஸ்ரீகணேஷ். அந்த படம் நல்ல வெற்றியைப் பெற்றும், அவருக்கு நல்ல பெயர் கிடைத்தும் அடுத்த படத்தை அவர் இயக்கி முடிக்க  5 ஆண்டுகள் ஆனது. அதர்வாவை வைத்து அவர் இயக்கி வெளியிட்ட குருதி ஆட்டம் திரைப்படம் ரிலீஸாகி படுதோல்விப் படமாக அமைந்தது.

இதனால் அவர் ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டு தற்போது ‘3BHK’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அதில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீத்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூலை 4 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதையடுத்து இன்று படத்தின் டிரைலர் ரிலீஸாகியுள்ளது.

சொந்தமாக மூன்று அறைகள் கொண்ட வீடு ஒன்றை வாங்க வேண்டும் என ஆசைப்படும் மிடில் க்ளாஸ் அப்பாவான சரத்குமாருக்கு, அவரின் குடும்பமே துணையாக இருந்து அந்த ஆசையை நிறைவேற்றி வைக்கும் கதை என்பதை டிரைலர் காட்டுகிறது. ஒரு ஃபீல்குட் படத்த்துக்கான நிதானமான முன்னோட்டமாக இந்த டிரைலர் உருவாக்கப்பட்டு, படத்தைக் காணும் ஆவலை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.