பிப்ரவரியில் திரைக்கு வரும் சித்தார்த்தின் ஜில் ஜங் ஜக்


லெனின் அகத்தியநாடன்| Last Modified ஞாயிறு, 3 ஜனவரி 2016 (16:37 IST)
சித்தார்த் தயாரித்து நடித்திருக்கும், ஜில் ஜங் ஜக் திரைப்படம் பிப்ரவரி 12 -ஆம் தேதி திரைக்கு வருகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் இந்தப் படத்தில் நாயகியே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
ஜில் ஜங் ஜக் டார்க் காமெடி வகையைச் சேர்ந்தது. ஏறக்குறைய ஒரு பரிசோதனை முயற்சி. தீரஜ் வைத்தி இயக்க, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இதன் பாடல்கள், ட்ரெய்லர்கள் ஏற்கனவே வெளியான நிலையில், டிசம்பர் 24 படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
 
மழை வெள்ள பாதிப்பால் தமிழக மக்கள் விழிபிதுங்கியிருந்த நேரம் என்பதால் டிசம்பர் 24 வெளியாவதாக இருந்த படத்தை தள்ளி வைத்தனர். தற்போது, பிப்ரவரி 12 படம் திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர்.
 
சித்தார் சுந்தர் சி. இயக்கத்தில் நடித்துள்ள அரண்மனை 2 ஜனவரி 29 திரைக்கு வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :