எனக்கு எந்த நோட்டீஸும் வரவில்லை - ஸ்ருதி தரப்பு விளக்கம்


Mahalakshmi| Last Modified புதன், 1 ஏப்ரல் 2015 (10:39 IST)
கார்த்தி, நாகார்ஜுன் இணைந்து தமிழ், தெலுங்கில் நடிக்கும் படத்தை பிக்சர் ஹவுஸ் மீடியா தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஸ்ருதி திடீரென படத்திலிருந்து விலகிக் கொண்டார்.
 
 
ஸ்ருதியின் இந்தச் செயலால் எங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது, ஸ்ருதி மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு தொடர வேண்டும் என்று பிக்சர் ஹவுஸ் மீடியா நீதிமன்றம் சென்றது.
 
அவர்களின் மனுவை விசாரித்த நீதிபதி, ஸ்ருதி மீது கிரிமினல் வழக்கு தொடர உத்தரவிட்டதாகவும், புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்யக் கூடாது என தனது உத்தரவில் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
 
இந்நிலையில், எவ்வித நோட்டீஸும் யாரிடமிருந்தும் ஸ்ருதிக்கு வரவில்லை என அவர் தரப்பு விளக்கமளித்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :