வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 20 டிசம்பர் 2014 (09:22 IST)

இசையால் வசப்படுத்தும் சாஹசம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் நடிக்கும் படம், சாஹசம். அருண்ராஜ் வர்மா இயக்கும் இந்தப் படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கிறார். உடல் எடையை குறைத்து பளபளவென மாறியிருக்கிறார் பிரசாந்த்.
 
தமன் இசையமைக்கும் இந்தப் படம் மியூஸிகல் ட்ரீட்டாக தயாராகிறது. ஏற்கனவே லட்சுமி மேனன், ஆண்ட்ரியா, அனிருத் போன்ற பாடகரல்லாத பிரபலங்களும், மோஹித் சவ்கான், யோ யோ ஹனிசிங், அர்ஜித் சிங் போன்ற பிரபல பாடகர்களும் பாடியுள்ளனர்.
 
இந்நிலையில், இசையமைப்பாளரும், முன்னணி பாடகருமான சங்கர் மகாதேவனும் இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். இவர் பாடிய பாடல் நேற்று மும்பையில் பதிவானது. பெண்களை கவரும் வண்ணம் பாடலாசிரியர் கபிலன் எழுதிய இந்த பாடலை ஏற்கெனவே ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார். 
 
அடுத்த வருடம் படம் திரைக்கு வருகிறது.