1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Shah rukh khan king movie release postpone to 2027

ஷாருக் கானின் ‘கிங்’ படத்தின் ரிலீஸ் ஒரு வருடம் தள்ளிவைப்பு!

ஷாருக் கான்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார். அவர் நடித்த பதான், ஜவான் மற்றும் டன்கி ஆகிய மூன்று படங்களும் அடுத்தடுத்து ஹிட்டாகின.

ஹாட்ரிக் கொடுத்த ஷாருக் கான் அடுத்து ‘கிங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தை சுஜாய் கோஷ் இயக்க ஒரு முக்கிய வேடத்தில் ஷாருக் கானின் மகள் சுஹானா கான் நடிக்க உள்ளார்.  அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயமடைந்ததை அடுத்து அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

இதன் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மருத்துவர்கள் ஷாருக் கானை ஓய்வு எடுக்க சொல்லி வலியுறுத்தியுள்ளதால் ‘கிங்’ படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டு அதன் ரிலீஸ் 2027 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
நெகட்டிவ் விமர்சனங்கள்… கூலி படத்துடன் க்ளாஷ்…. வார் 2 முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு?