வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (14:57 IST)

பாலியல் தொல்லை இல்லாத நாள் பெண்களுக்கு முழு சுதந்திரம் என கூறும் டாப்சி

பாலியல் தொல்லை இல்லாத நாள் பெண்களுக்கு முழு சுதந்திரம் என கூறும் டாப்சி

மும்பையில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை டாப்ஸி இவ்வாறு கூறினார்.


 
 
“நள்ளிரவில் ஒரு பெண் எப்போது தனியாக செல்ல முடிகிறதோ அப்போதுதான் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்று மகாத்மா காந்தி கூறி இருக்கிறார். ஆனால் இன்றுள்ள நிலைமை அப்படியா இருக்கிறது? நிர்பயாவை ஒரு கும்பல் நாசம் செய்த சம்பவத்தை எப்படி மறக்க முடியும். எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றன. மானபங்கம் செய்யப்படுகிறார்கள்.
 
இதுபோன்ற சம்பவங்கள் இல்லாத இந்தியாவை பார்க்க ஆசைப்படுகிறேன் என்று இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கூறி இருக்கிறார். அதே ஆசை எனக்கும் இருக்கிறது. பாலியல் கொடுமைகளில் இருந்து பெண்கள் மீளும் நாள்தான் அவர்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்த நாளாக இருக்கும். பெண்களுக்கு எதிரான இந்த பாலியல் கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும்.
 
நான் அமிதாப்பச்சனுடன் ‘பிங்க்’ என்ற இந்தி படத்தில் பாலியல் பலாத்காரத்தில் சிக்கிய இளம்பெண் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். அதில் நடித்தபோது பாலியல் ரீதியாக சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் எப்படி கஷ்டப்பட்டு இருப்பார்கள் என்று உணர முடிந்தது. படப்பிடிப்பில் அழுது விட்டேன். படக்குழுவினர் என்னிடம் இது கதைதான் என்று சொல்லி ஆறுதல் படுத்தினார்கள்.
 
பெண்கள் மதிக்கப்பட வேண்டும் அவர்களை போற்ற வேண்டும். பிங்க் படம் பார்ப்பவர்கள் பாலியல் சித்ரவதையை அனுபவித்த ஒரு பெண்ணின் துக்கத்தை உணர்வார்கள். பாலியல் குற்றங்களை குறைப்பதற்கான தூண்டுகோலாக இந்த படம் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என தெரிவித்துள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்