புதுப்பேட்டை 2!.. செம அப்டேட் கொடுத்த செல்வராகவன்!..
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2006ம் வருடம் வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. எனவே, படத்தை தயாரித்த அந்த நிறுவனத்திற்கு பல கோடிகள் நஷ்டம் வந்தது.
வட சென்னையில் வசிக்கும் ரவுடிகளின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து செல்வராகவன் இயக்கியிருந்த இந்த படத்தில் சினேகா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பது..
இந்த படம் வசூலை பெறவில்லை என்றாலும் தனுஷ் ரசிகர்களுக்கு இப்படம் பிடித்திருந்தது.. எனவே புதுப்பேட்டை 2 படத்தை எப்போது எடுப்பீர்கள் என அவர்கள் தொடர்ந்து செல்வராகவனிடம் பல வருடங்களாகவே கேட்டு வந்தார்கள்.
இந்நிலையில்தான், புதுப்பேட்டை 2 படத்தின் கதையை எழுதி முடித்து விட்டதாக செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இது தனுஷ் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறது.