வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 27 மே 2017 (12:36 IST)

அஜித்தின் குணத்தை பார்த்து பிரமிக்கும் நடிகர் வித்தார்த்!

அஜித்தின் குணங்கள் பற்றி எல்லோரும் அறிந்தது தான். தன்னை சந்திக்க யார் வந்தாலும் அவர்களை வாசலுக்கே சென்று உற்சாகமாக வரவேற்று சந்தோஷமாக வழியனுப்பிவைப்பார். அஜித் உண்மையிலேயே மனிதாபிமானம் மிக்கவர். படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் சரி சமமாக நடத்துமாறு கேட்டுள்ளார்.
 
 
அஜித் தன்னுடன் நடித்த அல்லது பழகும் சக நடிகர்களுக்கு மரியாதை கொடுத்து பழகுவது, அவர்களுடைய கஷ்ட காலத்தில் உதவுவது என நிறைய விஷயங்கள் அவர் செய்து வருகிறார். அவ்வப்போது பல பிரபலங்களும் பல பேட்டிகளில் அஜித்தை  பற்றி புகழ்ந்து பேசி வருகின்றனர். சமீபத்தில் அஜித்தை, ‘தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார்’ எனப் புகழ்ந்துள்ளார் பாலிவுட்  நடிகரான விவேக் ஓபராய்.
 
இதேபோல் அஜித்துடன் வீரம் படத்தில் நடித்த நடிகர் வித்தார்த் அண்மையில் ஒரு பேட்டியில், வீரம் படத்தில் நடிக்க போகும்போது ஒரு ரசிகரா போய் பின் படம் முடியும் வேலையில் அவருக்கு தம்பியாக மாறிவிட்டேன். அஜித் அவர்களே  எனக்கு அடிக்கடி போன் செய்து எப்படி இருக்கிறீர்கள், குடும்பம் எப்படி என கேட்பார். அதை நினைக்கும் போது எனக்கு  பிரம்மிப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.