செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2015 (16:02 IST)

நாளை சவாலே சமாளி வெளிவரும் - தயாரிப்பாளர்கள் சங்கத்தை எதிர்த்து அருண்பாண்டியன் அதிரடி

நாளை முதல் எந்தத் தமிழ்ப் படங்களும் வெளியாகாது என பாயும் புலி விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்து அறிக்கை வெளியிட்டது. அதற்கு பதிலடி தந்திருக்கிறார், தயாரிப்பாளரும் நடிகருமான அருண் பாண்டியன்.
 

 
லிங்கா படத்தை தமிழகத்தில் விநியோகித்த வேந்தர் மூவிஸ் தயாரித்த படம் பாயும் புலி. செப்டம்பர் 4 பாயும் புலி வெளியாகும் என விளம்பரப்படுத்திய பிறகு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், லிங்காவுக்கு நஷ்டஈடு தந்தால் மட்டுமே பாயும் புலியை திரையிடுவோம் என தடை விதித்தனர். 
 
இந்தப் பிரச்சனை முடியாததால் நாளை - நான்காம் தேதி முதல் எந்தத் தமிழ்ப் படமும் வெளியாகாது என நேற்று அறிக்கை வெளியிட்டனர். அதனை அருண் பாண்டின் விமர்சித்ததுடன், தனது சவாலே சமாளி திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகும் என்றார்.
 
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது.
 
நாங்கள் ‘சவாலே சமாளி’ படத்திற்கு 90 நாட்களுக்கு முன்னதாகவே சென்சார் வாங்கிவிட்டு, கடந்த ஒரு மாத காலமாக படத்தை வெளியிடுவதற்கான விளம்பரங்களில் ஈடுபட்டு வருகிறோம். தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த அறிவிப்பு 10 நாட்களுக்கு முன்னதாக வெளிவந்திருந்தால், இதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்வோம். 
 
ஆனால், படம் வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாக வெளிவந்த இந்த அறிவிப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. ஏனென்றால், இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதற்காக ஒரு குழுவை நியமித்து இதற்காக பணிபுரிந்து வருகிறோம். இந்தியாவில் வெளியிடாமல் இருப்பதற்கு முயற்சி செய்யலாமே தவிர, வெளிநாடுகளில் வெளியாவதை தடுக்க முடியாது. 
 
வெளிநாடுகளில் ரிலீசாகியப் பிறகு இந்த படத்தை தாமதப்படுத்தி இங்கே ரிலீஸ் செய்தால், அதில் எந்த பிரயோஜனமுமில்லை. இதில் எங்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும். 
 
அதனால், தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ள முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ளோம். எனவே, திட்டமிட்டபடி நாளை ‘சவாலே சமாளி’ படம் வெளிவந்தே தீரும் என்று தெரிவித்தார்.a