சந்தானம், விவேக் இணையும் சக்கப்போடு போடு ராஜா

Sasikala| Last Updated: வெள்ளி, 4 நவம்பர் 2016 (14:20 IST)
சர்வர் சுந்தரம் படத்தை முடித்த சந்தானம் தற்போது, சக்கப்போடு போடு ராஜா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் விசேஷம், விவேக்கும் சந்தானத்துடன் முக்கிய வேடமேற்றுள்ளார்.

 
இனிமேல் நாயகன்தான் என்பதில் சந்தானம் உறுதியாக உள்ளார். அவரது நம்பிக்கைக்கு உறுதி செர்க்கும் வகையில் தொடர்ந்து படங்கள் வருகின்றன. சக்கப்போடு போடு ராஜா படத்தை அறிமுக இயக்குனர் சேதுராமன் இயக்குகிறார். இந்தப் படத்தை டிவிடி கணேஷ் தயாரிக்கிறார்.
 
முழுக்க காமெடிப் பின்னணியில் இந்தப் படம் தயாராகிறது. சர்வர் சுந்தரம் படத்தில் நாயகியாக நடித்துள்ள வைபவி ஷாந்தலியா இந்தப் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.


இதில் மேலும் படிக்கவும் :