1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Sanjay Dutt Praises 21-Year-Old Producer Anupriya Nagar as Hanuman Ansh Crosses Major Milestone

21 வயது இளம்பெண் தயாரிப்பில் உருவான படம்.. இதுவரை 334 கோடி ரூபாய் வசூலித்து சாதனை.. சஞ்சய்தத் வாழ்த்து..

சஞ்சய் தத்
தனது 21 வயதில் 'ஹனுமான் அன்ஷ்'   என்ற படத்தைத் தயாரித்த இளம் தயாரிப்பாளர் அனுப்ரியா நகரை பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், வெகுவாக பாராட்டியுள்ளார். இப்படத்தின் போஸ்ட்-புரொடக்‌ஷன் பணிகளுக்காக அனுப்ரியா தனது முதலீட்டை செய்துள்ளார். 
 
மகாராஜ்ஜியின் வழிகாட்டுதலின்படி இப்படத்தில் அவர் முதலீடு செய்ததாகவும், மூன்று தலைமுறைகளை சேர்ந்த பெண்கள் இப்படத்துடன் இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனுப்ரியாவின் அர்ப்பணிப்பை பாராட்டியுள்ள சஞ்சய் தத், எதிர்காலத்திட்டங்களிலும் அவருக்கு தனது முழு ஆதரவு இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
டாக்டர் விஷால் சதுர்வேதி இயக்கத்தில், நீம் கரோலி பாபாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம், இந்தியாவில் இதுவரை 334.52 கோடி ரூபாய் நெட் வசூலை குவித்துள்ளது. 
 
இப்படத்தில் சோபினா சத்யா மற்றும் சந்தன் ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
 
சஞ்சய் தத், அனுப்ரியா நகர், ஹனுமான் அன்ஷ், பாலிவுட் சினிமா, பாக்ஸ் ஆபிஸ் வெற்றி
 
 
Sanjay Dutt, Anupriya Nagar, Hanuman Ansh, Bollywood Movie, Box Office Collection
 
 
Sanjay Dutt Praises 21-Year-Old Producer Anupriya Nagar as Hanuman Ansh Crosses Major Milestone
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
பாக்கெட் நாவல் படத்தில் இளையராஜாவுக்கு பதில் ஜிவி பிரகாஷ்!.. நடந்தது என்ன?...