1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. sandy master praise dhanush dance in d55

தனுஷ் மேலே பறந்தார்!.. D55 படத்துல ஒரு செம பாட்டு!.. ஹைப் ஏத்தும் சாண்டி மாஸ்டர்!..

dhanush
துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கி ஒரு கட்டத்தில் முன்னணி கதாநாயகனாக மாறியவர் தனுஷ். இரண்டு முறை தேசிய விருதும் வாங்கியுள்ளார். நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பல அவதாரங்களை எடுத்திருக்கிறார்.

அவரின் நடிப்பில் வெளியான கர திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தற்போது அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் தனுஷ் நடித்து வருகிறார் இது அவரின் 55வது திரைப்படமாகும்.. இந்த படம் 140 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு நடனமைத்த அனுபவத்தை பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய சாண்டி மாஸ்டர் நீண்ட இடைவெளிக்கு பின் தனுஷ் சார் ஒரு முழு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். அவர் ஆடுவதை பார்த்து நானே ஆச்சரியப்பட்டேன். அவரிடம் செம எனர்ஜி இருக்கிறது. தனுஷ் நடனம் தரையில் மிதந்து பரப்பது போல் இருந்தது.. இந்த படம் வெளியாகும்போது  ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய ட்ரீட் இருக்கு’ என சொல்லி ஹைப் ஏற்றியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
அதிரடி சரவெடியாக வந்ததா அர்ஜுனின் பிளாஸ்ட்? இதோ முழு அலசல்!