வெள்ளி, 14 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 25 ஆகஸ்ட் 2025 (11:59 IST)

நடிப்பதைக் குறைத்துக் கொண்டதற்கான காரணம் என்ன?... சமந்தா பதில்!

நடிப்பதைக் குறைத்துக் கொண்டதற்கான காரணம் என்ன?... சமந்தா பதில்!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா 25 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார்.  தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவைத் திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகளில் விவாகரத்துப் பெற்றார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால்  அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை. இதற்கிடையில் அவரது தந்தையின் மரணமும் அவரை வெகுவாகப் பாதித்தது.

அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் நடிப்பில் எந்த படமும் ரிலீஸாகவில்லை. இப்போது சில படங்கள் மற்றும் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் இருந்து மும்பைக்குக் குடியேறி அங்கு வசித்து வருகிறார். இதற்கிடையே அவர் ‘ட்ராலாலா மூவிஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி படங்களைத் தயாரிக்க தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டது ஏன் என்பது பற்றி சமந்தா பேசியுள்ளார். அதில் “நான் இப்போது உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். அதனால்தான் படங்களின் எண்ணிக்கைக் குறைந்துள்ளது. என்னால் முன்பு போல ஒரே நேரத்தில் நான்கைந்து படங்களில் நடிக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.