சமந்தா கொடுத்த காதல் பரிசு

சமந்தா கொடுத்த காதல் பரிசு


Sugapriya| Last Modified திங்கள், 15 ஆகஸ்ட் 2016 (12:00 IST)
சமந்தா, நாக சைதன்யா காதல் தான் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலகின் ஹாட் டாப்பிக்.


 


நாகார்ஜுனா தயாரிப்பில், தெலுங்கில் நாக சைதன்யா நடித்த ‘ஒக்க லைலா கோசம்’ சமீபத்தில் வெளியாகி ஹிட்டானது.  இப்படம் தமிழில் ‘லைலா ஓ லைலா’ பெயரில் டப் ஆகிறது.

ஹீரோயின் பூஜா ஹெக்டே, பிரபு, சுமன், ஷாயாஜி ஷிண்டே, நாசர், பிரம்மானந்தம், ஆலி, ஆசிஷ் வித்யார்த்தி, சுப்ரீத் ஆகியோரும் நடிக்கின்றனர். ஐ.ஆண்ட்ரு ஒளிப்பதிவில், அனூப் ரூபென்ஸ் இசையில், ஷாஜி வசனத்தில், கே.விஜயகுமார் இயக்கியுள்ளார்.

இதற்கிடையில் நாக சைதன்யா நடித்துள்ள ‘பிரேமம்’ படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் விதத்தில் சமந்தா தனது இணைய தள பக்கத்தில் இதய வடிவிலான 3 காதல் சின்னங்கள் பரிசளித்திருக்கிறார்.

படத்தில் 3 தோற்றத்தில் நாக சைதன்யா நடிப்பதால் 3 காதல் சின்னங்கள் பரிசு தந்திருக்கிறாராம்.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :