சந்தானத்துடன் ஜோடி போடும் சாய் பல்லவி!!


Sugapriya Prakash| Last Modified சனி, 5 நவம்பர் 2016 (14:49 IST)
செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்க உள்ள படத்திற்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
 
கோலிவுட்டில் காமெடியனாக கலக்கி வந்த சந்தானம், இப்போது பிசியான ஹீரோ. தில்லுக்கு துட்டு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது நான்குக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் செல்வராகவன் இயக்கவுள்ள படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ”மலர் டீச்சர்” சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாய் பல்லவி சந்தானத்தின் பெரிய ரசிகை என்பதால் இந்த வாய்ப்பை உடனே அவர் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிகிறது. 
 
தற்போது மலையாளத் திரைப்படம் ஒன்றில் நடித்து வரும் சாய் பல்லவி, அடுத்த ஆண்டு செல்வராகவன் நடிக்கும் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :