12 பெரிய படங்களை தட்டி தூக்கிய சாய் அபயங்கர்!.. அனிருத் என்னாச்சி?..
அனிருத்திடம் சில படங்களில் வேலை செய்தவர் சாய் அபயங்கர். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து 340 கோடி வசூலை அள்ளிய கருப்பு திரைப்படத்திற்கும் சாய பயங்கரே இசையமைத்திருந்தார். இதையடுத்து பல பெரிய நடிகர்கள் தங்களின் படத்திற்கு சாய் அபயங்ரை இசையமைக்க முடிவு செய்கிறார்கள்.
அந்த வகையில் விஜய் சேதுபதி நடித்துள்ள பக்தா, தனுஷ் நடித்துள்ள ஓம், அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் தமிழ் முருகன், சூர்யாவின் 48 வது படம், பிரதீப் ரங்கநாதனின் தயாரிப்பில் ஒரு படம், ராகவா லாரன்ஸ் நடித்து வரும் பென்ஸ், கார்த்தி நடித்து வரும் மார்சல், அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ராக்கா, துருவ் விக்ரம் நடிக்கவுள்ள புதிய படம், அஸ்வத் மாரிமுத்து சிம்புவுடன் இணையும் படம், சிவகார்த்திகேயனின் புதிய படம், டியூட் பட இயக்குனர் சிம்புவை வைத்து இயக்கவுள்ள ஒரு திரைப்படம் என கையில் 12 படங்களை வைத்திருக்கிறார் சாய் அபயங்கர்.
பெரும்பாலான நடிகர்களின் படங்களுக்கு அனிருத் இசையமைத்துவந்த நிலையில் தற்போது பலரும் சாய் அபயங்கர் பக்கம் செல்வது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான நடிகர்களின் படங்களுக்கு அனிருத் இசையமைத்துவந்த நிலையில் தற்போது பலரும் சாய் அபயங்கர் பக்கம் செல்வது குறிப்பிடத்தக்கது.
