எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு சர்வகலா சாம்ராட் விருது


Suresh| Last Updated: ஞாயிறு, 3 ஜனவரி 2016 (15:00 IST)
விசாகப்பட்டினத்தில் ஆண்டுதோறும் நடக்கும் விசாக உற்சவம் நேற்று நடந்தது.

 

 
இதில் முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், "விசாகப்பட்டினம் 'ஹிட் ஹுட் 'புயல் தாக்குதலில் இருந்து மீண்டு வந்துள்ளது.
 
இதனை பெரிய நகரமாக மாற்ற முயற்சி செய்வேன்" என்று கூறினார்.
 
நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களை சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். மேலும், சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கினார்.
 
பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு சர்வ கலா சாம்ராட் விருது வழங்கப்பட்டது.
 
இசையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஆற்றிய சேவையை கவுரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :