எஸ்.ஏ.சந்திரசேகரனை பிரமிக்க வைத்த கிருமி


லெனின் அகத்தியநாடன்| Last Modified சனி, 19 செப்டம்பர் 2015 (15:22 IST)
அனுசரண் இயக்கியிருக்கும் கிருமி படம் குறித்து திரையுலகில் நல்ல கருத்தும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது. கதிர், ரேஷ்மி மேனன் நடித்துள்ள இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதியிருப்பவர் காக்கா முட்டையை இயக்கிய மணிகண்டன்.
 
 
கிருமி படவிழாவில், கிருமி படத்தைப் பார்த்த அனுபவத்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பகிர்ந்து கொண்டார்.
 

 
"கிருமி படத்தை எனக்கு திரையிட்டு காட்டினார்கள். பிரமிப்பாக இருந்தது. திரையுலகுக்கு புதிது புதிதாக நிறைய டைரக்டர்களும், நடிகர்களும் வருகிறார்கள். எல்லோரும் மிகவும் திறமைசாலிகளாக இருக்கின்றனர். திரையுலகில் அவர்கள் மிரட்டுகிறார்கள்.
 
புதியவர்கள் புது புது சிந்தனையுடன் வருகிறார்கள். தமிழ் சினிமாவை அவர்கள் எங்கேயோ கொண்டு போய்க் கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் என்னைப் போன்றவர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது" என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :