1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Rishab shetty to direct Hrithik roshan in his next

ரிஷப் ஷெட்டியின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோவா?

காந்தாரா
கன்னட சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் செயல்பட்டு வந்த ரிஷப் ஷெட்டி தற்போது காந்தாரா படங்களின் மூலம் பேன் இந்தியா அளவில் அறியப்பட்ட நடிகராக உள்ளார். சுமார் 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கன்னட மொழியில் உருவானா ‘காந்தாரா’ திரைப்படம் இந்திய அளவில் பேன் இந்தியா ஹிட் ஆகி 400 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்குகள் மூலமாக மட்டுமே வசூலித்தது.

அதையடுத்து மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது அதன் இரண்டாம் பாகம் ‘காந்தாரா -1’ ரிலீஸாகியுள்ளது. இந்த படமும் முதல் பாகம் போலவே வெற்றிகரமாக ஓடி இதுவரை 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. காந்தாரா படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் விரைவில் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இதையடுத்து ரிஷப் ஷெட்டி ஜெய் ஹனுமான் படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் அவர் அடுத்து இயக்கும் படத்தில் ஹ்ரூத்திக் ரோஷன் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
அனுபமாவின் லேட்டஸ்ட் ஹோம்லி லுக் க்ளிக்ஸ்!