1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Rishab shetty joined the Prasanth neel junior NTR movie

ஜூனியர் என் டி ஆர் & பிரசாந்த் நீல் படத்தில் இணைந்த ரிஷப் ஷெட்டி?

பிரசாந்த் நீல்
கேஜிஎஃப் படங்களுக்குப் பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக ஆகியுள்ளார் பிரசாந்த் நீல். இதையடுத்து அவர் இயக்கிய சலார் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸாகி தோல்வி படமானது. இதனால் அதன் இரண்டாம் பாகம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில வாரங்களாக நடந்து வந்த நிலையில் சமீபத்தில் அதில் ஜூனியர் என் டி ஆர் கலந்துகொண்டார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக ருக்மிணி வசந்த் நடிக்கிறார்.

இந்த படத்தில் வில்லனாக டோவினோ தாமஸ் நடிக்கிறார். தற்போது இந்த படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க ‘காந்தாரா’ புகழ் ரிஷப் ஷெட்டி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
இணைகிறது சிம்பு தேவன் & விமல் கூட்டணி… வெளியான தகவல்!