1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. reason behind suriya not gifted rj balaj

கருப்பு சூப்பர் ஹிட்!.. ஆர்.ஜே.பாலாஜி கிஃப்ட் கொடுக்காத சூர்யா!. இதுதான் காரணமா?..

karuppu
நடிகராக இருந்து இயக்குனராக மாறியவர் ஆர்.ஜே.பாலாஜி. நயன்தாராவை வைத்து அவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் சூப்பர் ஹிட் ஆனதால், கெட்டவர்களை அழிக்க கடவுள் மனிதராக வருவார் என்கிற கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்டு கருப்பு திரைப்படத்தை இயக்கினார்.

இந்த திரைப்படம் கடந்த மே 15ம் தேதி வெளியாகி உலகமெங்கும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்டது, தமிழகத்தில் மட்டும் கருப்பு திரைப்படத்தை ஒரு கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். சிங்கம் படத்திற்கு பின் தனக்கு ஒரு சூப்பர் ஹிட் அமைந்ததால் சந்தோஷமடைந்த சூர்யா இந்த படத்தின் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் மற்றும் எடிட்டர் ஆகிய மூவருக்கும் 30 லட்சம் மதிப்புள்ள ஒரு புதிய காரை பரிசாக கொடுத்தார். ஆனால் படத்தை இயக்கிய ஆர்.ஜே பாலாஜிக்கு இதுவரை சூர்யா எந்த பரிசும் கொடுக்கவில்லை..

பொதுவாக ஒரு படம் சூப்பர் ஹிட் என்றால் படத்தின் ஹீரோ இயக்குனருக்குதான் கிப்ட் கொடுப்பார். அதுதான் நடைமுறை. ஆனால் சூர்யாவோ இயக்குனர் பாலாஜியை விட்டுவிட்டு மற்றவர்களுக்கு கொடுத்திருக்கிறார். பாலாஜிக்கு சூர்யா கிப்ட் கொடுக்காததன் பின்னனியில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

இந்த படம் துவங்கியதிலிருந்தே படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவுக்கும்,. ஆர்.ஜே.பாலாஜிக்கும் இடையே செட் ஆகவில்லை.  இதனால் 2 வருடங்கள் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்தது. எஸ்.ஆர்.பிரபு சூர்யாவின் நெருங்கிய உறவினர்.  எனவே, சூர்யா எப்படியோ படத்தை நடித்துக் கொடுத்திருக்கிறார்.  தற்போது படம் சூப்பர் ஹிட் அடித்த பின்னரும் கூட ஆர்.ஜே பாலாஜியும், தயாரிப்பாளரும் ராசியாகவில்லை. அதனால்தான் பாலாஜிக்கு சூர்யா கிப்ட் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
பதவி மேல் ஆசையில்லை!.. சிக்மா ஃபர்ஸ்ட் சிங்கிள் வீடியோ ரிலீஸ்!...